December 2025

நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் எவ்விதமான முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ அல்லது ஊழலுக்கோ இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. இது ஊழலை முற்றாக ஒழித்து, நேர்மையான நிர்வாகத்தை நிலைநாட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் […]

நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை விவரங்களைப் பதிவு செய்வதற்கும், அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான தொலைபேசி இலக்கங்கள்

வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தச் சூழல் காரணமாகக் கால்நடைத் துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும்

வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை விவரங்களைப் பதிவு செய்வதற்கும், அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான தொலைபேசி இலக்கங்கள் Read More »

உலக வங்கியின் நிதியுதவியில் குளங்களைத் தூர்வாரும் செயற்பாடு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படும் போது வழுக்கையாற்றுப் படுக்கையிலுள்ள குளங்களும் தூர்வாரப்படும். – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன்

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண நிர்வாகம் தனது ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் உறுதியளித்தார். வடக்கு மாகாணத்தில் ‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வு சுன்னாகத்திலுள்ள

உலக வங்கியின் நிதியுதவியில் குளங்களைத் தூர்வாரும் செயற்பாடு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படும் போது வழுக்கையாற்றுப் படுக்கையிலுள்ள குளங்களும் தூர்வாரப்படும். – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் Read More »

நாயாற்றுப் பாலம் ஊடான தொடர்பு துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொக்கிளாய் மக்களை ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் நேரடியாகச் சென்று சந்தித்தார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அண்மையில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடுவதற்கும், ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழான நடமாடும் சேவையில் கலந்து கொள்வதற்கும் நேற்று வெள்ளிக்கிழமை (05.12.2025) முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொண்டார். உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தூய்மை இலங்கை செயலகம், மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், ‘தூய்மை இலங்கை – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு’ என்ற தேசிய திட்டத்துக்கு அமைய ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு

நாயாற்றுப் பாலம் ஊடான தொடர்பு துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொக்கிளாய் மக்களை ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் நேரடியாகச் சென்று சந்தித்தார். Read More »

கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த இலக்கை இன்னமும் முழுமையாக அடையவில்லை – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்

கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தை காலம் கடந்த அல்லது செயலிழந்த ஒரு திணைக்களமாகத் தொடர்ந்தும் அடையாளப்படுத்துவதைத் தவிர்த்து, அதனை மாற்றியமைக்கத் தூரநோக்குடன் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இம்முயற்சிகள் வெறும் ஆய்வுகளோடு நின்றுவிடாமல் செயல்வடிவம் பெற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாண கிராமிய வளர்ச்சியின் எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலும், அது சார்ந்த ஆய்வின் வெளியீட்டு நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை (05.12.2025)

கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த இலக்கை இன்னமும் முழுமையாக அடையவில்லை – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார் Read More »

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீதிகளைப் பார்வையிட்ட ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாகத் மீட்டெடுக்கும் வகையில் சேதமடைந்த வீதிகளைத் தற்காலிகமாகவேனும் உடனடியாகச் சீரமைக்குமாறு பணிப்புரை

வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக வட மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் திருமதி அபிராமி வித்யாபரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட வீதிகளைப் பார்வையிட்ட வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாகத் மீட்டெடுக்கும் வகையில் சேதமடைந்த வீதிகளைத் தற்காலிகமாகவேனும் உடனடியாகச்

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீதிகளைப் பார்வையிட்ட ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாகத் மீட்டெடுக்கும் வகையில் சேதமடைந்த வீதிகளைத் தற்காலிகமாகவேனும் உடனடியாகச் சீரமைக்குமாறு பணிப்புரை Read More »

“யாழ். தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் உட்கட்டுமான அழிவுகள் அதிகம்; இயல்பு வாழ்க்கையைத் திருப்பவே களத்தில் நிற்கிறேன்” – வவுனியா, கிளிநொச்சி விஜயத்தின் பின் ஆளுநர் கருத்து

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களும் வெள்ளத்தால் மிக மோசமான அழிவுகளையும், அதிகளவான உட்கட்டுமானச் சேதங்களையும் எதிர்கொண்டுள்ளன. அவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, மாகாண நிர்வாகத்தின் ஊடான புனரமைப்பு வேலைத் திட்டங்களை விரைவுபடுத்தி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவதற்காகவே இங்கு வந்துள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட கண்காணிப்பு பயணத்தை வடக்கு மாகாண ஆளுநர் இன்று புதன்கிழமை

“யாழ். தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் உட்கட்டுமான அழிவுகள் அதிகம்; இயல்பு வாழ்க்கையைத் திருப்பவே களத்தில் நிற்கிறேன்” – வவுனியா, கிளிநொச்சி விஜயத்தின் பின் ஆளுநர் கருத்து Read More »

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள் ஆளுநரிடம் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள், வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (03.12.2025) காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள் ஆளுநரிடம் குறிப்பிட்டார். உடனடி உதவிகள் (நிவாரணம்), மீள்கட்டுமான உதவிகள் (வாழ்வைக் கட்டியெழுப்புதல்), நிரந்தரத் தயார்ப்படுத்தல் (எதிர்கால இடர்களை எதிர்கொள்ளல்). வடக்கு மாகாண மக்களுக்கான தற்போதைய

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள் ஆளுநரிடம் குறிப்பிட்டார். Read More »

ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மக்களை நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடினார்

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் நேரடி பயணமொன்றை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய அவர், சேதமடைந்த பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டார். மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதால், மாகாண நிர்வாகத்தினர் எவ்வித தாமதமுமின்றி நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். ஆளுநர் அவர்கள், மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கூராய்,

ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மக்களை நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடினார் Read More »

இடர் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்கு முன்வராத கூட்டுறவு சங்கங்கள் இயங்குவதில் அர்த்தமில்லை – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் சீற்றம்

இயற்கைப் பேரிடரால் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இக்கட்டான நேரத்தில், அவர்களுக்கு உதவுவதற்கு முன்வராத கூட்டுறவுச் சங்கங்கள் இயங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அவ்வாறான சங்கங்கள் கடைகளை இழுத்து மூடிவிட்டுச் செல்லலாம், என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் எச்சரித்துள்ளார். ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புகள் மற்றும் தேவைகளைக் கண்டறிவதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (01.12.2025) பிற்பகல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் தனது அதிருப்தியை

இடர் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்கு முன்வராத கூட்டுறவு சங்கங்கள் இயங்குவதில் அர்த்தமில்லை – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் சீற்றம் Read More »