மகாகவி பாரதியார் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூக மாற்றத்துக்கான முற்போக்குச் சிந்தனைகளைத் துணிவுடன் விதைத்தவர் – பாரதியாரின் ஜனன தின நிகழ்வில் ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்.
மகாகவி பாரதியார் நூற்றாண்டுக்கு முன்பே விதைத்துச் சென்ற முற்போக்குச் சிந்தனைகள், இன்றும் எமது சமூகத்தில் முழுமையான செயல்வடிவம் பெறவில்லை என்பதே நிதர்சனம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (11.12.2025) மாலை நடைபெற்றது. இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சிறீ சாய்முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பாரதியாரின் […]
