“வாழ்வாதார உதவி வழங்குவதுடன் நின்றுவிடாது, உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவும் வழியமைப்போம்!” – புதிய அமைச்சுக் கட்டடத் திறப்பு விழாவில் ஆளுநர் உறுதி
வடக்கு மாகாண சபை ஊடாகச் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு, அவர்களது தொழில் மேம்பாட்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதுடன் மாத்திரமல்லாது, அவர்களது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றோம். அத்துடன், அவர்களது உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக […]
