வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படல் வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்
வடக்கு மாகாணத்துக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் ஊடாக, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்த முறையான ஆய்வும் மதிப்பீடும் அவசியமென வடக்கு மாகாணத்தின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (27.12.2025) மாலை, 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது, வடக்கு மாகாணத்தின் 5 அமைச்சுக்களாலும், அவற்றின் […]
