கண்ணீரைத் துடைத்து கரம் கோர்ப்போம்: சூழல் காத்து எளிமையாக கொண்டாடுவோம் – வடக்கு ஆளுநரின் கிறிஸ்மஸ் செய்தி
உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்மஸ் நத்தார் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கமாக கிறிஸ்மஸ் என்றாலே குதூகலமும், கொண்டாட்டமும் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இம்முறை எமது நாடும், எமது மாகாணமும் பெரும் சோகத்தைச் சுமந்து நிற்கிறது. அண்மையில் நம்மைத் தாக்கிய ‘டித்வா’ புயல், நம் மண்ணில் ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறவில்லை. அந்தப் பேரிடரில் தங்கள் உயிர்களையும், உறவுகளையும், வாழ்நாள் சேமிப்பான உடமைகளையும் இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் கண்ணீரை கவனிக்காது […]
