December 24, 2025

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மை இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்இடம்பெற்றது.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மை இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டத்தை, வட மாகாணத்தில் வினைத்திறனாகவும் ஒருங்கிணைந்தும் முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (24.12.2025) புதன்கிழமை, வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் மாகாண இணைப்பாளர் சு.கபிலன், மாவட்டச் செயலாளர்கள், மாகாண, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் நேரடியாகவும் […]

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மை இலங்கை’ (Clean Sri Lanka) செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்இடம்பெற்றது. Read More »

இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ள தரச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைக்கு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

வடக்கின் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதித் தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) இணைந்து முன்னெடுத்துள்ள தரச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைக்கு வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வடக்கிலேயே பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கை கட்டளைகள் நிறுவனம் தரச் சான்றிதழ்களை வழங்குவது தொடர்பாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கான மாகாண நிர்வாகத்தின்

இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ள தரச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைக்கு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். Read More »

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நடைபெற்றது.

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, டான் தொலைக்காட்சி குழுமத்தின் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நேற்று செவ்வாய்கிழமை (23.12.2025) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மின் அலங்காரத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். நிகழ்வின் ஆரம்பத்தில், நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆளுநர் அவர்கள் அஞ்சலிச் சுடரை ஏற்றி

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நடைபெற்றது. Read More »

பல இடங்களில் அரச நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாவனையற்ற நிலையில் உள்ளன; புதிய கட்டடங்கள் அமைப்பதை தவிர்த்து, பாவனையற்றுள்ள கட்டடங்களைப் புனரமைத்துப் பயன்படுத்துங்கள். – வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

அரசாங்கத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமாயின் சரியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே, பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களுடன் கலந்தாலோசித்து, அவர்களுடன் இணைந்து உண்மையான பயனாளிகளைத் தெரிவு செய்யுங்கள். அதன் மூலமே இத்திட்டங்களின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும்

பல இடங்களில் அரச நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாவனையற்ற நிலையில் உள்ளன; புதிய கட்டடங்கள் அமைப்பதை தவிர்த்து, பாவனையற்றுள்ள கட்டடங்களைப் புனரமைத்துப் பயன்படுத்துங்கள். – வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். Read More »

“யாழ்ப்பாணம்” என்ற வர்த்தக நாமத்தைப் பாதுகாத்து, சுயதொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவோம்! – கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை உயர்த்தி, சுயதொழில் முயற்சியாளர்களை நேரடி ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன், சர்வதேச சந்தையில் போலிப் பொருட்களால் பாதிப்படைந்துள்ள ‘யாழ்ப்பாணம்’ எனும் எமது தனித்துவமான வர்த்தக நாமத்தைப் பாதுகாத்து, எமது உற்பத்திகளைத் தனித்துவத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி, தேசிய ஒருமைப்பாட்டு தின

“யாழ்ப்பாணம்” என்ற வர்த்தக நாமத்தைப் பாதுகாத்து, சுயதொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவோம்! – கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

“மத்திய அரசின் மேலதிக நிதியைப் பெற இப்போதே தயாராகுங்கள்” – வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்கு விடுத்த முக்கிய பணிப்புரை!

வடக்கு மாகாணத்தின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வழமையான மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்கு அப்பால், மத்திய அரசாங்கத்தின் நிரல் அமைச்சுக்களிடமிருந்தும் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் இப்போதே திட்டங்களைத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி,

“மத்திய அரசின் மேலதிக நிதியைப் பெற இப்போதே தயாராகுங்கள்” – வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்கு விடுத்த முக்கிய பணிப்புரை! Read More »