விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை முறையான சந்தை வாய்ப்பு இல்லாமையாகும். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு
விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெற வேண்டும் என்பதுடன், அவர்கள் வெறும் உற்பத்தியாளர்களாக மட்டும் நின்றுவிடாமல் தொழில்முனைவோராகவும் மாற்றமடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை விவசாயத் தொழில்முனைவோர் மன்றத்தின் (Sri Lanka Agripreneurs’ Forum – SLAF) ஏற்பாட்டில், யாழ்ப்பாண சேதன விவசாய பொது பட்டியலிடப்படாத நிறுவனம் (Jaffna Organic Farmer Public Unlisted Company) மற்றும் அக்ரோ பெனிபிட் லங்கா […]
