December 12, 2025

மகாகவி பாரதியார் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூக மாற்றத்துக்கான முற்போக்குச் சிந்தனைகளைத் துணிவுடன் விதைத்தவர் – பாரதியாரின் ஜனன தின நிகழ்வில் ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மகாகவி பாரதியார் நூற்றாண்டுக்கு முன்பே விதைத்துச் சென்ற முற்போக்குச் சிந்தனைகள், இன்றும் எமது சமூகத்தில் முழுமையான செயல்வடிவம் பெறவில்லை என்பதே நிதர்சனம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (11.12.2025) மாலை நடைபெற்றது. இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சிறீ சாய்முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பாரதியாரின் […]

மகாகவி பாரதியார் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூக மாற்றத்துக்கான முற்போக்குச் சிந்தனைகளைத் துணிவுடன் விதைத்தவர் – பாரதியாரின் ஜனன தின நிகழ்வில் ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது

வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், பொதுமக்களை நேரில் சந்திக்கும் வாராந்த ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது என்பதைப் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம். எனினும், அதற்கு அடுத்த வார திங்கட்கிழமை (22.12.2025) வழமை போன்று ஆளுநர் செயலகத்தில் பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறும். எனவே, பொதுமக்கள் இந்த மாற்றத்தைக் கவனத்திற் கொண்டு, தமது வருகையைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது Read More »