“1970 – 80 களில் இருந்தது போன்று வடக்கின் கூட்டுறவுத்துறை மீண்டும் தலைநிமிர வேண்டும்: தவறான முகாமைத்துவத்தால் மக்கள் நம்பிக்கை இழப்பு” – ஆளுநர் நா.வேதநாயகன் காட்டமான உரை
‘1970 – 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வடக்கின் கூட்டுறவுத்துறை எவ்வாறு செல்வாக்கு செலுத்திச் கோலோச்சியதோ, அதேபோன்று இத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடனும் உளச்சுத்தியுடனும் செயற்பட்டு வருகின்றது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கு எமது கூட்டுறவு அமைப்புக்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான விசேட ஆலோசனைக் கூட்டம் […]
