“மக்களின் துயர் துடைப்பதே முதற்பணி; அதிகாரிகளே தற்துணிவுடன் களமிறங்குங்கள்” – அபிவிருத்தி மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு
வடக்கு மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்குக் கரங்கொடுத்து, அவர்களை மீட்டெடுத்து வாழ்வாதாரத்தை உறுதி செய்வது எமது தார்மீகப் பொறுப்பாகும். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்யும் அதேவேளை, மாகாணத்தின் வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களையும் எவ்வித தாமதமுமின்றித் துரித கதியில் நிறைவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் அனைத்துத் திணைக்களத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடனான அவசர உயர்மட்டக் கலந்துரையாடல், […]
