வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை விவரங்களைப் பதிவு செய்வதற்கும், அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான தொலைபேசி இலக்கங்கள்
வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தச் சூழல் காரணமாகக் கால்நடைத் துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் […]
