December 3, 2025

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள் ஆளுநரிடம் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள், வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (03.12.2025) காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள் ஆளுநரிடம் குறிப்பிட்டார். உடனடி உதவிகள் (நிவாரணம்), மீள்கட்டுமான உதவிகள் (வாழ்வைக் கட்டியெழுப்புதல்), நிரந்தரத் தயார்ப்படுத்தல் (எதிர்கால இடர்களை எதிர்கொள்ளல்). வடக்கு மாகாண மக்களுக்கான தற்போதைய […]

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி அவர்கள் ஆளுநரிடம் குறிப்பிட்டார். Read More »

ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மக்களை நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடினார்

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் நேரடி பயணமொன்றை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய அவர், சேதமடைந்த பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டார். மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதால், மாகாண நிர்வாகத்தினர் எவ்வித தாமதமுமின்றி நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். ஆளுநர் அவர்கள், மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கூராய்,

ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மக்களை நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடினார் Read More »

இடர் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்கு முன்வராத கூட்டுறவு சங்கங்கள் இயங்குவதில் அர்த்தமில்லை – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் சீற்றம்

இயற்கைப் பேரிடரால் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இக்கட்டான நேரத்தில், அவர்களுக்கு உதவுவதற்கு முன்வராத கூட்டுறவுச் சங்கங்கள் இயங்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. அவ்வாறான சங்கங்கள் கடைகளை இழுத்து மூடிவிட்டுச் செல்லலாம், என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் எச்சரித்துள்ளார். ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புகள் மற்றும் தேவைகளைக் கண்டறிவதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (01.12.2025) பிற்பகல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் தனது அதிருப்தியை

இடர் காலத்தில் மக்களுக்கு உதவுவதற்கு முன்வராத கூட்டுறவு சங்கங்கள் இயங்குவதில் அர்த்தமில்லை – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் சீற்றம் Read More »

இடர் நிவாரணப் பணிகளை மாவட்டச் செயலகங்கள் ஊடாக ஒருங்கிணைக்கவும்: மோசடிகளைத் தவிர்க்க வடக்கு ஆளுநர் வேண்டுகோள்

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச் சரியான முறையில் சென்றடைவதையும், மோசடிகள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்த, அந்தந்த மாவட்டச் செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான அவசர கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) காலை ஆளுநர்

இடர் நிவாரணப் பணிகளை மாவட்டச் செயலகங்கள் ஊடாக ஒருங்கிணைக்கவும்: மோசடிகளைத் தவிர்க்க வடக்கு ஆளுநர் வேண்டுகோள் Read More »