December 2025

பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று திங்கட்கிழமை (01.12.2025) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் இக்காலக்கட்டத்தில், தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பது மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை மீளமைப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான […]

பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடனான விசேட அவசரக் கலந்துரையாடல் ஒன்று இணையவழியாக இடம்பெற்றது.

இன்று (01.12.2025) திங்கட்கிழமை காலை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடனான விசேட அவசரக் கலந்துரையாடல் ஒன்று இணையவழியாக இடம்பெற்றது. இதன்போது, இடருக்குப் பின்னரான காலப்பகுதியில் அந்தந்த மாகாணங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதியால் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மாகாணங்களின் தற்போதைய களநிலவரம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். வடக்கு மாகாணத்தின் நிலைவரம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்த ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பின்வரும் விடயங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்: முல்லைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடனான விசேட அவசரக் கலந்துரையாடல் ஒன்று இணையவழியாக இடம்பெற்றது. Read More »

வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்களின் தற்போதைய நிலவரம்

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 நீர்ப்பாசனத் திட்டங்களில், இன்று ஞாயிற்றுக்கிழமை (30.11.2025) மாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் படி 51 குளங்கள் வான் பாய்ந்தவண்ணம் இருந்தாலும், அக்குளங்களில் வான் பாயும் நீரின் அளவு கணிசமான அளவு குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாகாணத்தின் தற்போதைய நீர்ப்பாசன நிலவரம்: இரணைமடு குளத்தின் நிலை: நேற்று சனிக்கிழமை (29.11.2025) நண்பகல் 40 அடி

வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்களின் தற்போதைய நிலவரம் Read More »