November 27, 2025

சீரற்ற வானிலை மற்றும் இடர் நிலைமையைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் விசேட அறிவுறுத்தல்

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இடர் நிலைமையைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தில் இயங்கி வரும் முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அந்தந்தப் பிரதேசங்களில் நிலவும் இடர் நிலைமை மற்றும் வானிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, முஸ்லிம் பாடசாலைகளை மூடுவது அல்லது தொடர்ந்து நடத்துவது தொடர்பான தீர்மானங்களை அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்கொள்வதற்கு, ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தல் […]

சீரற்ற வானிலை மற்றும் இடர் நிலைமையைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் விசேட அறிவுறுத்தல் Read More »

சுகாதார அமைச்சின் கீழ், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் குறித்த மாதாந்தக் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது

வடக்கு மாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் அமைக்கப்பட்டால் மட்டுமே, ஐந்து மாவட்ட மக்களும் அதன் நன்மைகளைச் சமமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். எனவே, மாங்குளத்தில் இத்திணைக்களத்துக்காக ஒதுக்கப்பட்ட காணியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ், 2025ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும்

சுகாதார அமைச்சின் கீழ், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் குறித்த மாதாந்தக் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது Read More »

உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் முறைப்பாடளித்தால், அதை உடனடியாகச் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்காது, கட்டுமானம் முடிவடைந்த பின்னரே ஆராயும் நிலை காணப்படுவது குறித்து மக்கள் தமக்கு பல முறைப்பாடுகளை முன்வைப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், மக்களின் இவ்வாறான முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தவறும்பட்சத்தில் உரிய அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் வலியுறுத்தினார். வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும்

உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »