November 23, 2025

கண்டாவளையில் நீண்டகாலக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு – ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 17 முறைப்பாடுகள் தீர்த்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் விசேட காணி நடமாடும் சேவையொன்று இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) நடைபெற்றது. கண்டாவளைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரடியாகப் கலந்துகொண்டு பொதுமக்களின் காணிப் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 17 காணி தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் […]

கண்டாவளையில் நீண்டகாலக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு – ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 17 முறைப்பாடுகள் தீர்த்து வைப்பு Read More »

வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க கனகராயன் ஆற்றுப் புனரமைப்பு – ஆளுநர் நா.வேதநாயகன் கள ஆய்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கனகராயன் ஆற்றுப் புனரமைப்புப் பணிகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) நேரில் சென்று பார்வையிட்டார். இரணைமடுக் குளம் வான்பாயும் காலங்களில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கால், கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வதும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைவதும்

வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க கனகராயன் ஆற்றுப் புனரமைப்பு – ஆளுநர் நா.வேதநாயகன் கள ஆய்வு Read More »

நிதியை விடுவிக்க அரசு தயார்; ஆனால் அதிகாரிகளே தடையாக உள்ளனர்” – அதிகாரிகளை நினைத்து வெட்கப்படுகிறேன் என ஆளுநர் நா.வேதநாயகன் கடும் சாடல்

மத்திய அரசாங்கம் நாங்கள் கோரும் நிதியை விடுவிப்பதற்குத் தயாராக உள்ளது. ஆனால், வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். இத்தகைய அதிகாரிகளை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் விசனம் வெளியிட்டார். கிளிநொச்சி, புதுமுறிப்புக் கிராமத்தில் மக்கள் நலன்சார் பணிகளை ஆற்றிவரும் ‘பத்மலோக – மனிதவள சிறப்பாற்றல் நிறுவனத்தின்’ 10ஆவது ஆண்டு

நிதியை விடுவிக்க அரசு தயார்; ஆனால் அதிகாரிகளே தடையாக உள்ளனர்” – அதிகாரிகளை நினைத்து வெட்கப்படுகிறேன் என ஆளுநர் நா.வேதநாயகன் கடும் சாடல் Read More »