November 18, 2025

வியட்நாம் — வடக்கு மாகாண ஒத்துழைப்பு கலந்துரையாடல் : வடக்கில் வியட்நாமிய முதலீட்டுக்கு தூதுவர் உறுதி

வியட்நாமைப் போல போரை எதிர்கொண்ட வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் சவால்களை நாங்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்றும், வடக்கு மாகாணத்தில் வியட்நாமியர்கள் முதலீடு செய்வதற்கான ஊக்குவிப்புகளை வழங்குவோம் என்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி தாம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த வியட்நாம் தூதுவர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான குழுவினரை இன்று திங்கட்கிழமை மாலை (17.11.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் […]

வியட்நாம் — வடக்கு மாகாண ஒத்துழைப்பு கலந்துரையாடல் : வடக்கில் வியட்நாமிய முதலீட்டுக்கு தூதுவர் உறுதி Read More »

O/L விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான சிறப்பு இணையவழி வகுப்புகள் – வடக்கு மாகாணத்தில் தொடக்கம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் விளிம்பு நிலை மாணவர்களுக்கான கூடுதல் கல்வி ஆதரவை வழங்கும் நோக்கில் வடக்கு மாகாணம் புதிய செயற்றிட்டத்தை முன்னெடுக்கிறது. இதனை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை (17.11.2025) கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப உதவியுடன் அனலைதீவு மற்றும் எழுவைதீவு பிரதேசங்களில் ஏற்கனவே இணையவழி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த முயற்சியை மாகாணம் முழுவதும் விரிவாக்க

O/L விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான சிறப்பு இணையவழி வகுப்புகள் – வடக்கு மாகாணத்தில் தொடக்கம் Read More »

த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club – Sri Lanka) நிறுவனத்தின் பிரதிநிதிகள் கௌரவ ஆளுநரை சந்தித்தனர்.

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற, த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club – Sri Lanka) நிறுவனத்தின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை காலை (17.11.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்து முன்னேற்றங்களை விவரித்தனர். வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாநாட்டின் ஒருங்கிணைப்பு, முதலீட்டாளர்கள் பங்கேற்பு மற்றும் வடக்கின் முக்கிய

த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club – Sri Lanka) நிறுவனத்தின் பிரதிநிதிகள் கௌரவ ஆளுநரை சந்தித்தனர். Read More »