வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றங்களை ஒருங்கிணைத்து பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றிற்கான ஒருங்கிணைந்த பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (14.11.2025) ஆளுநர் செயலகத்தில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் தொடக்கத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்துக்கான ஒருங்கிணைந்த பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மாகாண நிர்வாகத்துக்கும், வர்த்தக மற்றும் தொழிற்துறை மன்றங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், இணைந்து […]
