வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பிரதேசங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டியது அவசியமாகும் – கௌரவ ஆளுநர்
உள்ளூராட்சி மன்றங்கள் சேவைகளை வழங்குவதற்கும் மேலாக தங்களது வருமானங்களையும் அதிகரிக்க வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்கி, உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் இன்று வியாழக்கிழமை (13.11.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் […]
