கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று வியாழக்கிழமை (06.11.2025) மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆரம்ப உரை இடம்பெற்றது. அதன் பின்னர் இணைத்தலைவர் உரையாற்றிய ஆளுநர், ஆண்டு நிறைவடைவதற்கு இன்னமும் ஆறு வாரங்கள் […]
