November 2, 2025

வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் நீளமான வீதிகள் பல திருத்தப்பட வேண்டியுள்ளன. – கௌரவ ஆளுநர்

மழை காலங்களில் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்ட வவுனியா மாவட்டத்தின் பிரமனாலன்குளம் – பரப்புக்கடந்தான் வீதியில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக அமைக்கப்பட்ட இரண்டு ஆற்றுச்சருக்கைகளை (causeway) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை (01.11.2025) மக்கள் பாவனைக்கு கையளித்தார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில், ரூ. 45.49 மில்லியனில் இந்த இரண்டு ஆற்றுச்சருக்கைகளும் முழுமையாக வீதி அபிவிருத்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட அலுவலகத்தின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. […]

வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் நீளமான வீதிகள் பல திருத்தப்பட வேண்டியுள்ளன. – கௌரவ ஆளுநர் Read More »

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (31.10.2025) நடைபெற்றது. இது தொடர்பான முதலாவது கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன், மேற்படி பிரதேசங்களுக்கு நேரடியாக களப் பயணம் மேற்கொண்டு தனது அவதானிப்புக்களை சமர்ப்பித்திருந்தார். அதற்கு அமைவாக எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. அத்துடன் அடுத்த ஆண்டு

அனலைதீவு, எழுவைதீவு பிரதேச கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

இலங்கையில் வளமுள்ள மாகாணமான வடக்கு மாகாணம், வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றது – கௌரவ ஆளுநர்

விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியிலுள்ள இந்தோனேஷpயா தனது அனுபவங்களை வடக்கு மாகாணத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர், பிரதித்தூதுவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (31.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பில் எடுத்துரைத்த ஆளுநர், தற்போதைய

இலங்கையில் வளமுள்ள மாகாணமான வடக்கு மாகாணம், வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றது – கௌரவ ஆளுநர் Read More »