உலக வங்கியின் நிதியுதவியில் யாழ்ப்பாணக் கோட்டையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
உலக வங்கியின் நிதியுதவியில் யாழ்ப்பாணக் கோட்டையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கோட்டையின் அபிவிருத்தியின் தேவைப்பாடு தொடர்பில் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி அதிகார சபையால் கோட்டையின் அபிவிருத்தி தொடர்பில் தயாரிக்கப்பட்ட திட்டமுன்மொழிவும் முன்வைக்கப்பட்டது. திட்டத்தை தொடங்குவதற்கான தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு புத்தசாசன சமய கலாசார அமைச்சர் […]
