October 24, 2025

‘விடியல்’ நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறுகிய காலத்துக்குள் செல்வந்தராகவேண்டும் என்பதற்காக உயிர்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் சமூகம் தொடர்பில் சிந்திப்பதில்லை. அதேநேரம், உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களையும் அச்சுறுத்தியிருக்கின்றனர். இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து சமூகம் எப்படியாவது போகட்டும் என்று ஒதுங்கியிருக்க முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகமும் மாற்றம் அறக்கட்டளையும் இணைந்து, அருட்கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் அவர்கள் எழுதிய ‘விடியல்’ நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச் […]

‘விடியல்’ நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. Read More »

முதியோர்கள்தான் எங்களின் வழிகாட்டிகள். இன்றைய இளையதலைமுறை முதியோரின் அறிவுரைகளைக் கேட்பதற்குக் கூடத் தயாராக இல்லை. – கௌரவ ஆளுநர்

இன்றைய இளம் சமுதாயம் முதியோரை தங்கள் தேவைக்குப் பயன்படுத்திய பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சென்று விடும் போக்குத்தான் இப்போது இங்கு அதிகரித்து வருகின்றது. அதனால்தான் முதியோர் இல்லங்கள் உருவாகிக்கொண்டு செல்கின்றன. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி சிவநகர் கிராம மூத்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை (23.10.2025) சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர்

முதியோர்கள்தான் எங்களின் வழிகாட்டிகள். இன்றைய இளையதலைமுறை முதியோரின் அறிவுரைகளைக் கேட்பதற்குக் கூடத் தயாராக இல்லை. – கௌரவ ஆளுநர் Read More »

உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்பட்டால்தான் மக்களின் தேவைகளை முழுமைப்படுத்த முடியும். – கௌரவ ஆளுநர்

மாகாணசபைகள் சார்பில் மக்களோடு நேரடியாகத் தொடர்புபட்டு பணியாற்றும் நிறுவனங்கள் உள்ளூராட்சி மன்றங்களே. அந்த மன்றங்களின் சேவைகளை மக்களிடத்தே முன்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பும் அவற்றை விரைந்து சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்றும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களையே சாரும். அவர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள்

உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்பட்டால்தான் மக்களின் தேவைகளை முழுமைப்படுத்த முடியும். – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர்

தனியே யாழ்ப்பாண மாவட்டம் மாத்திரம் வடக்கு மாகாணம் அல்ல. ஆளணிகள் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் வைத்திருக்க முடியாது. ஏனைய 4 மாவட்டங்களுக்கும் யாழ். மாவட்டத்திலிருந்தே ஆளணிகளைப் பங்கீடு செய்யவேண்டியுள்ளது. அந்தப் பங்கீட்டை உரியவாறு முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (22.10.2025) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 2026ஆம் ஆண்டுக்கான

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »