காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் சேவைகளை விரிவாக்கி விரைவுபடுத்தவும் வேண்டும். – கௌரவ ஆளுநர்
தவறான விடயத்தை செய்து வந்தால் அதைத் தொடர்வதற்கே விரும்புகின்றனர். அதை மாற்றுவதற்கு பின்னடிக்கின்றனர். மாற்றத்தை எல்லோரும் ஒன்றிணைந்தாலே ஏற்படுத்த முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள், செயலாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (22.10.2025) வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், காலத்துக்கு […]
