October 19, 2025

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

ஒளியின் திருநாளாகிய தீபாவளி, இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நல்வழியைக் குறிக்கின்றது. தீமையை வீழ்த்தி நன்மை வெற்றிபெறும் நினைவூட்டலாகவும், அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி நிலவும் சமூகத்தை உருவாக்கும் ஊக்கமாகவும் இந்தப் பண்டிகை விளங்குகிறது. நம் மனத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் இருளை – அறியாமை – பொறாமை – தீமை அகற்றி ஒளியை அறிவு – அன்பு – நம்பிக்கை – பரப்பும் திருநாளாகும். இந்த இனிய நாளில், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்பிக்கையும் சந்தோஷமும் ஒளி வீசட்டும். வடக்கு […]

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி Read More »

கிறீன் லேயர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையை கௌரவ ஆளுநர் திறந்து வைத்தார்.

மரத்தை நடுகை செய்வது அதனைப் பராமரிப்பது என்பது கூட விசமிகளின் செயலால் எமது மாகாணத்தில் சவாலாகி வருகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தார். மரம் நடுகையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கிறீன் லேயர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையை இன்று சனிக்கிழமை மாலை (18.10.2025) வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் திறந்து வைத்தார். அங்கு உரையாற்றிய ஆளுநர், கிறீன் லேயர் அமைப்பு மிகப் பெரிய வேலைத் திட்டத்தை எமது மாகாணத்தில் முன்னெடுத்து

கிறீன் லேயர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையை கௌரவ ஆளுநர் திறந்து வைத்தார். Read More »

சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்தால் சிறப்பான நாட்டை உருவாக்க முடியும். – கௌரவ ஆளுநர்

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்கவேண்டும். பிள்ளைகளை இலக்கு வைத்து வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது. அதை உடைத்தெறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். பிள்ளைகள் மீதான முதலீடு என்பது சிறப்பான எதிர்கால நாட்டுக்கான அடித்தளமாகும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலை

சிறுவர்களுக்கு உடல், உள ரீதியான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது. சிறுவர்களை அன்பாகப் போசித்தால் சிறப்பான நாட்டை உருவாக்க முடியும். – கௌரவ ஆளுநர் Read More »

எமது முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களே எங்களது பண்பாடு. அதை நாம் எமது அடுத்த சந்ததியிடம் ஒப்படைக்கவேண்டும். – கௌரவ ஆளுநர்

மாணவர்கள் கல்விக்கு மேலதிகமாக தலைமைத்துவப் பண்பையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். கல்வியால் மாத்திரம் முழுமையடைந்து விட முடியாது. தலைமைத்துவப் பண்புமிருந்தால்தான் முழுமையடைய முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும், புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு பெருவிழாவின் அரங்க நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை காலை (18.10.2025) பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது. அரங்க நிகழ்வுக்கு முன்னதாக 40 இற்கும் மேற்பட்ட பண்பாட்டு ஊர்திகளின் பவனிகள் நடைபெற்றிருந்தன. அரங்க

எமது முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களே எங்களது பண்பாடு. அதை நாம் எமது அடுத்த சந்ததியிடம் ஒப்படைக்கவேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »