October 18, 2025

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் தீபாவளியன்று மூடுவதற்கான தீர்மானம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தீபாவளியன்று (20.10.2025) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தால் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அமைப்புக்களால், தீபாவளியன்று மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் தீபாவளியன்று மூடுவதற்கான தீர்மானம் Read More »

இலங்கையில் வளம் கூடியதும், வறுமை கூடியதுமான மாகாணம் எமது மாகாணம்தான். வளங்களை உரிய முறையில் பயன்படுத்தாமையால் வறுமையிலும் முன்னிலையில் இருக்கின்றோம். – கௌரவ ஆளுநர்

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைக்கவேண்டுமாக இருந்தால் கொள்வனவில் போட்டித்தன்மை தேவை. அவ்வாறான போட்டித்தன்மையான கொள்வனவை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக விவசாயமும் வருமானம் கூடிய துறையாக மாறும் என்ற நம்பிக்கையிருக்கிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பிரதேச செயலர் பிரிவில், விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ரெட் ஏஞ்ஜல் அக்ரோ லிமிட்டட் விவசாய கம்பனி உருவாக்கப்பட்டு அதன் கீழ்

இலங்கையில் வளம் கூடியதும், வறுமை கூடியதுமான மாகாணம் எமது மாகாணம்தான். வளங்களை உரிய முறையில் பயன்படுத்தாமையால் வறுமையிலும் முன்னிலையில் இருக்கின்றோம். – கௌரவ ஆளுநர் Read More »

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலை அதிபர்கள் கௌரவ ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, கடல் கடந்த தீவுகளின் பாடசாலை அதிபர்கள் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (17.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். நெடுந்தீவிலுள்ள 8 பாடசாலைகளில் 6 பாடசாலைகளும், அனலைதீவிலுள்ள 3 பாடசாலைகளும், எழுவைதீவிலுள்ள 2 பாடசாலைகளில் ஒரு பாடசாலையும் அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகவும் அதிபர்களால் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. ஏற்கனவே அந்தப்

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலை அதிபர்கள் கௌரவ ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும் பகுதியை கௌரவ ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியை ஆளுநர் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் தரம்பிரிப்பு நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் தொடர்பிலும் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் ஆளுநருக்கு எடுத்துக்கூறினார். தரம் பிரிக்கும் நடவடிக்கையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 17பேர் ஈடுபட்டுள்ள

நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும் பகுதியை கௌரவ ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். Read More »

உலக வங்கியின் நிதியுதவியில் யாழ்ப்பாணக் கோட்டையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

உலக வங்கியின் நிதியுதவியில் யாழ்ப்பாணக் கோட்டையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கோட்டையின் அபிவிருத்தியின் தேவைப்பாடு தொடர்பில் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி அதிகார சபையால் கோட்டையின் அபிவிருத்தி தொடர்பில் தயாரிக்கப்பட்ட திட்டமுன்மொழிவும் முன்வைக்கப்பட்டது. திட்டத்தை தொடங்குவதற்கான தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு புத்தசாசன சமய கலாசார அமைச்சர்

உலக வங்கியின் நிதியுதவியில் யாழ்ப்பாணக் கோட்டையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான அனைத்து உறுப்பினர்களுக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகளின் பட்டியலை முன்னுரிமைப்படுத்துமாறும் கிடைக்கப்பெறுகின்ற நிதிகளுக்கு ஏற்ப அவற்றை படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் புனரமைக்கலாம் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி இராசையா நளினி தலைமையிலான பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின்

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான அனைத்து உறுப்பினர்களுக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை, மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் குழப்பகரமான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், இரு சபைகளிலும் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் அவர்களிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக அவரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை, தெளிவுபடுத்தல்களுக்காக ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாண வருடாந்த ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை, மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை Read More »