October 17, 2025

ஒவ்வொரு மனிதனும் விரும்புவது ஆரோக்கியத்தையும், அமைதியையும் சந்தோசத்தையும்தான். தியானம் என்ற தன்மை எமக்குள் வந்துவிட்டால் அமைதியும் சந்தோசமும் இயல்பானதாகிவிடும். – கௌரவ ஆளுநர்

இன்றைய நாட்டுச் சூழல் அமைப்பில் வாழும் மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கப் பெற்றிருந்தாலும், அவர்களைச் சூழ்ந்திருக்கும் துன்பத்தை போக்குவதற்கும் அதிலிருந்து விடுதலை பெறுவதற்கும் தியானப்பயிற்சிகள் மற்றும் மன வளக்கலை யோகாப் பயிற்சிகள் தேவையாக இருக்கின்றன. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். பிறவுண் வீதியில் அமைந்துள்ள அறிவுத்திருக்கோயிலின் ஒன்பதாம் அகவை நாளை முன்னிட்டு அங்கு நேற்று புதன்கிழமை மாலை (15.10.2025) நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் கூறியதாவது, […]

ஒவ்வொரு மனிதனும் விரும்புவது ஆரோக்கியத்தையும், அமைதியையும் சந்தோசத்தையும்தான். தியானம் என்ற தன்மை எமக்குள் வந்துவிட்டால் அமைதியும் சந்தோசமும் இயல்பானதாகிவிடும். – கௌரவ ஆளுநர் Read More »

சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் கவனிப்புச் சேவைகள் திணைக்களத்திற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆறு (06) நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் ஒரு (01) முன்பள்ளி ஆசிரியர் ஆகியோருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதியன்று அமைச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் அவர்கள் நியமனக் கடிதங்களை வழங்கி வைக்க இருந்தார். நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள்

சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன Read More »