இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையத்தின் பிரதிநிதிகளுக்கும், கௌரவ ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுரண்டலற்ற முறையில் விவசாயிகள் தங்களுடைய உற்பத்திகளுக்கு நியாய விலை கிடைப்பதற்கு வழியேற்படுத்துவதும் நோக்கில் இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையம் யாழ். மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (09.10.2025) நடைபெற்றது. “GoVimart” என்னும் ஒன்றிணைந்த அணுகுமுறையூடாக, விவசாய உற்பத்திகளுக்கு நிலைபேறான தீர்வை […]