September 2025

சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் இடம்பெற்றது

Sea Leisure Yachting Group (SLYG) இனால் யாழ்ப்பாண இளைஞர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அம்பர்’ எனப் பெயரிடப்பட்ட சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை (04.09.2025) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி ஆகியோர் கலந்துகொண்டனர்.  

சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் இடம்பெற்றது Read More »

வடக்கு மாகாண புதிய கடற்படைத்தளபதி – ஆளுநர் சந்திப்பு

வடக்கு மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை இன்று (04.09.2025) வியாழக்கிழமை காலை மரியாதை நிமித்தம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.  

வடக்கு மாகாண புதிய கடற்படைத்தளபதி – ஆளுநர் சந்திப்பு Read More »

விவசாயிகளின் தேவைகளை தேடிச்சென்று இனங்கண்டு பூர்த்தி செய்ய வேண்டும் – ஆளுநர்

இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற பெறுபேறுகள் தொடர்பிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக்

விவசாயிகளின் தேவைகளை தேடிச்சென்று இனங்கண்டு பூர்த்தி செய்ய வேண்டும் – ஆளுநர் Read More »

திணைக்களத் தலைவர்கள் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் சேவையாற்றுதல் வேண்டும் – ஆளுநர்

பருவகால மழை ஆரம்பமாவதற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட வெள்ளவாய்க்கால்கள் மற்றும் மதகுகளை துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவேண்டும். அதேபோல கடந்த ஆண்டு வெள்ள இடர் பாதிப்புக்களை கவனத்திலெடுத்து அவற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற எடுத்த நடவடிக்கைகளைப் போல ஏனைய செயலாளர்களும் செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர்

திணைக்களத் தலைவர்கள் மக்களின் மனங்களை வெல்லும் வகையில் சேவையாற்றுதல் வேண்டும் – ஆளுநர் Read More »

அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா இன்று புதன்கிழமை காலை (03.09.2025) நடைபெற்றது. நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகருடன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்து, நிறுவனத்தையும் திறந்து வைத்தார். அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகளையும் ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் பார்வையிட்டனர். நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது. Read More »

மாங்குளத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயத் திட்டத்தைத் துரிதப்படுத்தும் நோக்கத்தில் ஆளுநர் தலைமையில் முதலாவது வழிகாட்டல் குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாங்குளத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயத் திட்டத்தைத் துரிதப்படுத்தி முன்னெடுக்கும் நோக்கத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான முதலாவது வழிகாட்டல் குழுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (03.09.2025) நடைபெற்றது. ஜக்கிய நாடுகள் தொழில்த்துறை அபிவிருத்தி நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டுமான அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய

மாங்குளத்தில் அமையவுள்ள முதலீட்டு வலயத் திட்டத்தைத் துரிதப்படுத்தும் நோக்கத்தில் ஆளுநர் தலைமையில் முதலாவது வழிகாட்டல் குழுக் கூட்டம் நடைபெற்றது. Read More »

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (15 – 31 செப்ரெம்பர் 2025

இவ் வாரம், 15 – 31 செப்ரெம்பர் 2025 மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணை – வவுனியா பூங்கனியியல் கரு மூலவளநிலையம் – அச்சுவேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – யாழ்ப்பாணம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – வட்டக்கச்சி, கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – முல்லைத்தீவு விவசாயிகள் பயிற்சி நிலையம் – மல்லாவி ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப் பண்ணை – தேராவில்

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (15 – 31 செப்ரெம்பர் 2025 Read More »

வட்டுவாகல் பாலம் இரண்டு ஆண்டுகளில் அபிவிருத்தி செய்யப்படும் – மாண்புமிகு ஜனாதிபதி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக முக்கியமான பாலமான வட்டுவாகல் பாலம் இரண்டு ஆண்டுகளில் அபிவிருத்தி செய்யப்படும் என மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மிக நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்த வட்டுவாகல் பாலத்தின் அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு வட்டுவாகலில் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) நடைபெற்றது. 140 கோடி ரூபா செலவில் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளது. இரு வழிப் பாதையாகச் செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்தப் பாலத்தின் அபிவிருத்திப் பணிகள்

வட்டுவாகல் பாலம் இரண்டு ஆண்டுகளில் அபிவிருத்தி செய்யப்படும் – மாண்புமிகு ஜனாதிபதி தெரிவித்தார். Read More »

கொக்கிளாய் – சிலாவத்துறை – பருத்தித்துறை ஆகிய இடங்களை இணைத்து வடக்கு தென்னை முக்கோண வலயம் உருவாக்கப்படவுள்ளது.

உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், ‘நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்’ என்ற வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் தொடக்க விழா இன்று செவ்வாய்கிழமை காலை (02.09.2025) மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். முன்னதாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு எதிரே உள்ள வளாகத்தில் தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான கண்காட்சியையும்,

கொக்கிளாய் – சிலாவத்துறை – பருத்தித்துறை ஆகிய இடங்களை இணைத்து வடக்கு தென்னை முக்கோண வலயம் உருவாக்கப்படவுள்ளது. Read More »

பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன. சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது இன்று திறந்து வைக்கப்பட்டது.

பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் Read More »