September 28, 2025

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விக்சித் பாரத் ஓட்டம் 2025′ நிகழ்வில், கௌரவ ஆளுநரும் கலந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (28.09.2025) நடைபெற்ற ‘யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025’ இன் நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு, ஓட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தனர். உலகளாவிய அளவில் 150 இற்க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் […]

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விக்சித் பாரத் ஓட்டம் 2025′ நிகழ்வில், கௌரவ ஆளுநரும் கலந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் Read More »

நவீன முறையினூடாக விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியும் – ஆளுநர்

எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற மக்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு பேரம்பேசி எமக்குத் தேவையானதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனூடாக எமது மாகாண மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். யாழ்ப்பாணம் வர்த்தக கைத்தொழில்துறை மன்றத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் யாழ்ப்பாணம் செல்வா பலஸில் இன்று சனிக்கிழமை மாலை (27.09.2025) மன்றத்தின் தலைவர் கு.வசீகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய

நவீன முறையினூடாக விவசாயிகள் குறைந்த முதலீட்டில் அதிக விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியும் – ஆளுநர் Read More »

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டம் கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (26.09.2025) மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போதைய நிலையில் கால் ஏக்கர் வீதம் 30 விவசாயிகள் பயிர்ச்செய்கை செய்ய முடியும் எனவும் எதிர்காலத்தில் விவசாயிகள் முயற்சிகளைப் பொறுத்து இதனை இன்னமும் விரிவாக்க முடியும் என்றும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள காணிகளையும் ஆளுநர் பார்வையிட்டார். விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக, மாகாண குறித்தொதுக்கப்பட்ட

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டம் கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

கிளிநொச்சியில் பிணக்கின்றியுள்ள மக்களின் காணி ஆவணங்களை விரைந்து வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு ஆளுநர் பணிப்புரை

கிளிநொச்சி மாவட்டத்தில் பிணக்கின்றி ஆட்சி செய்து வருகின்ற மக்களுக்குரிய காணிகளின் ஆவணங்களை அவர்களுக்கு விரைந்து வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கான பொறிமுறையை உருவாக்குமாறும் மாகாணக் காணி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் காணி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமும், காணி நடமாடும் சேவையும் இன்று வெள்ளிக்கிழமை (26.09.2025) மாவட்டச் செயலர் சு.முரளிதரன் தலைமையில்

கிளிநொச்சியில் பிணக்கின்றியுள்ள மக்களின் காணி ஆவணங்களை விரைந்து வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு ஆளுநர் பணிப்புரை Read More »

வடக்கு மாகாண மக்கள் நிதி அறிவில் திருப்திகரமாக இருந்தாலும், நிதி நடத்தையில் பின்தங்கியுள்ளனர் – ஆளுநர்

எமது வடக்கு மாகாண மக்கள் அறியாமையால் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களிடம் ஏமாறும் போக்கு தொடர்ந்து இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நிதியல் ரீதியான அறிவூட்டும் செயற்பாடு வரவேற்கத்தக்கதும் தேவையானதுமே. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்திய அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிதி அறிவியல் மாத நிகழ்வு, கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள அதன் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை

வடக்கு மாகாண மக்கள் நிதி அறிவில் திருப்திகரமாக இருந்தாலும், நிதி நடத்தையில் பின்தங்கியுள்ளனர் – ஆளுநர் Read More »