September 18, 2025

49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணம் புதிய சாதனை

உதைபந்தாட்டத்தில் 4வது தடவையாகவும் சம்பியன் கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனை 8 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்களைத் கைப்பற்றியது.! இலங்கையின் 49 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் காலி தடல்ல விளையாட்டரங்கில் ஆகஸ்ட் மாதம் 29,30, 31 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண வீர வீராங்கனைகள் 8 தங்கம் 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்களை பெற்று வடக்கு மாகாணத்திற்கு […]

49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணம் புதிய சாதனை Read More »

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (17.09.2025) நடைபெற்றது. நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சிகிச்சைப் பிரிவை இயக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் மருத்துவமனையின் பணிப்பாளரை பாராட்டுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அவரைப்போன்று ஏனைய மருத்துவமனைப் பணிப்பாளர்களும் செயற்பட முன்வர வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் ஆளணி மற்றும் ஏனைய நிர்வாகத்

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியதே. அவர்கள் தங்கள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் சில பாடங்களுக்கான ஆசிரிய ஆளணி மேலதிகம் என்று தரவுகளில் குறிப்பிடப்படுகின்றது. அப்படியானால் அந்தப் பாடங்களுக்கு வடக்கிலுள்ள எந்தவொரு பாடசாலையிலும் வெற்றிடம் இருக்கக் கூடாது. நடைமுறையில் அவ்வாறான நிலைமை இல்லை. இந்த ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியதே. அவர்கள் தங்கள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றி ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின்

ஆசிரிய ஆளணி சீராக்கத்தை முன்னெடுப்பதற்குரிய முழுப்பொறுப்பும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குரியதே. அவர்கள் தங்கள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் – ஆளுநர் Read More »