கல்லுண்டாய் ஐக்கிய சனசமூக நிலையக் கட்டடம் இன்று வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
கல்லுண்டாய் குடியேற்ற கிராமமும் ஏனைய இடங்களைப்போல சகல வசதிகளையும் பெற்று எழுச்சியுற்ற கிராமமாக மாறவேண்டும். அதற்காக எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். கல்லுண்டாய் குடியேற்ற கிராமத்தில், சி.தர்மகுலசிங்கம் மற்றும் அ.யோகராஜா ஆகியோரின் அனுசரணையுடன் சிறுவர் வறுமை நிவாரண நிதியத்தின் ஊடாக கட்டப்பட்ட கல்லுண்டாய் ஐக்கிய சனசமூக நிலையக் கட்டடம் இன்று வெள்ளிக்கிழமை (05.09.2025) வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. பிரதம விருந்தினராகக் கலந்து […]