September 2, 2025

வட்டுவாகல் பாலம் இரண்டு ஆண்டுகளில் அபிவிருத்தி செய்யப்படும் – மாண்புமிகு ஜனாதிபதி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக முக்கியமான பாலமான வட்டுவாகல் பாலம் இரண்டு ஆண்டுகளில் அபிவிருத்தி செய்யப்படும் என மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மிக நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்த வட்டுவாகல் பாலத்தின் அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு வட்டுவாகலில் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) நடைபெற்றது. 140 கோடி ரூபா செலவில் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளது. இரு வழிப் பாதையாகச் செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்தப் பாலத்தின் அபிவிருத்திப் பணிகள் […]

வட்டுவாகல் பாலம் இரண்டு ஆண்டுகளில் அபிவிருத்தி செய்யப்படும் – மாண்புமிகு ஜனாதிபதி தெரிவித்தார். Read More »

கொக்கிளாய் – சிலாவத்துறை – பருத்தித்துறை ஆகிய இடங்களை இணைத்து வடக்கு தென்னை முக்கோண வலயம் உருவாக்கப்படவுள்ளது.

உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், ‘நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்’ என்ற வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் தொடக்க விழா இன்று செவ்வாய்கிழமை காலை (02.09.2025) மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். முன்னதாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு எதிரே உள்ள வளாகத்தில் தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான கண்காட்சியையும்,

கொக்கிளாய் – சிலாவத்துறை – பருத்தித்துறை ஆகிய இடங்களை இணைத்து வடக்கு தென்னை முக்கோண வலயம் உருவாக்கப்படவுள்ளது. Read More »

பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன. சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது இன்று திறந்து வைக்கப்பட்டது.

பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் Read More »