August 2025

கிளிநொச்சி மருத்துவமனையின்பெண் நோயியல் பிரிவு உடன் இயக்கத் தொடங்க வேண்டும் – ஆளுநர்

நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண பெண் நோயியல் மருத்துவமனையை படிப்படியாக எவ்வளவு விரைவாக இயக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இயக்குவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும், இதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மருத்துவமனையின் செயற்பாடுகளை இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை (25.08.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மேற்படி […]

கிளிநொச்சி மருத்துவமனையின்பெண் நோயியல் பிரிவு உடன் இயக்கத் தொடங்க வேண்டும் – ஆளுநர் Read More »

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது

வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக்

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது Read More »

தெய்வீக சுகானுபவம் – 11

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத் தூதரகத்துடன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு இணைந்து நடாத்திய தெய்வீக சுகானுபவம் பதினோராவது (11) நிகழ்வானது 2025.08.20 புதன்கிழமை யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நல்லூர்க் கோட்டக்கல்வி அலுவலக முன்றலில் (முன்னாள் யா/கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில்) வடக்கு மாகாண கல்விஇ பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக

தெய்வீக சுகானுபவம் – 11 Read More »

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை பதில் பாடசாலை நாள்

  நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு 21.08.2025 அன்று யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறைக்கு அமைவான பதில் பாடசாலை நாள் எதிர்வரும் சனிக்கிழமை 30.08.2025 அன்று நடைபெறும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை பதில் பாடசாலை நாள் Read More »

வடக்கு மாகாணம் போன்று இலங்கையில் வேறு எங்கும் வளங்கள் இல்லை. பொருளாதாரத்துக்கு அதிகூடிய பங்களிப்புச் செய்கின்ற முதற்தர மாகாணமாக நமது மாகாணம் மாறவேண்டும்.

வடக்கு மாகாணத்திலுள்ள வளங்களைப் போன்று இலங்கையில் வேறு எந்த மாகாணங்களிலும் வளங்கள் இல்லை. ஆனால் எமது மாகாணத்திலுள்ள பல வளங்களை நாங்கள் இன்னமும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. எதைச் செய்து வருகின்றோமோ அதைத் தொடர்வதற்குத்தான் விரும்புகின்றோமே தவிர மாற்றங்களுக்கு எங்களைத் தயார்படுத்த தவறுகின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வவுனியாப் பல்கலைக்கழக வியாபார இணைப்பு அலகு மற்றும் முயற்சியாண்மை கற்கைநெறி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக முயற்சியாளர் தின

வடக்கு மாகாணம் போன்று இலங்கையில் வேறு எங்கும் வளங்கள் இல்லை. பொருளாதாரத்துக்கு அதிகூடிய பங்களிப்புச் செய்கின்ற முதற்தர மாகாணமாக நமது மாகாணம் மாறவேண்டும். Read More »

நாம் எப்போதும் தோல்விகளால் துவண்டு விடாது அவற்றை படிக்கற்களாக மாற்றவேண்டும் – ஆளுநர்

சிதம்பரா கணிதப் பரீட்சைப் போட்டியில் வெற்றி பெற்று லண்டனுக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்த மாணவன் கூறியதைப்போன்று, கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் எம்மால் எதையும் சாதிக்க முடியும். அதை நான் பல இடங்களில் கூறியிருக்கின்றேன். நாம் எப்போதும் தோல்விகளால் துவண்டு போகக் கூடாது. அதை படிக்கற்களாக மாற்றவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சிதம்பரா கணிதப் பரீட்சைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும், கணித விழா –

நாம் எப்போதும் தோல்விகளால் துவண்டு விடாது அவற்றை படிக்கற்களாக மாற்றவேண்டும் – ஆளுநர் Read More »

தற்போது மக்களுக்கு ஆன்மீகத்தின் மீதுள்ள ஈடுபாடு குறைந்து செல்வது கவலைக்குரிய விடயமாகும் – ஆளுநர்

எந்தவொரு விடயம் அழிக்கப்படுகின்றதோ அல்லது கால ஓட்டத்தில் மறைந்து செல்கின்றதோ அதைத்தக்க வைப்பதற்கும் அடுத்த சந்ததிக்கு ஒப்படைப்பதற்காகவும்தான் தினங்கள், அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. அதைப்போலத்தான் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பையும் நான் பார்க்கின்றேன். காலத்துக்கு தேவையான அமைப்பு. பொருத்தமான இடத்திலிருந்து பொருத்தமானவர்களால் தொடக்கப்பட்டு நடைபோடுகின்றது. இவ்வாறு புகழாரம் சூட்டினார் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள். நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வும் ஆண்டு விழாவும், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் இன்று

தற்போது மக்களுக்கு ஆன்மீகத்தின் மீதுள்ள ஈடுபாடு குறைந்து செல்வது கவலைக்குரிய விடயமாகும் – ஆளுநர் Read More »

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் தலைமையிலான குழுவினர், கௌரவ ஆளுநரை சந்தித்தனர்

உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் சிறப்பாகச் செயற்படும் தாய்லாந்து அது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பெய்ரூன் தலைமையிலான குழுவினர், ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (22.08.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். தூதுக்குழுவினரை வரவேற்ற ஆளுநர், பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதில் தாய்லாந்து முன்னணியில் உள்ளமையை சுட்டிக்காட்டினார். மிக

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் தலைமையிலான குழுவினர், கௌரவ ஆளுநரை சந்தித்தனர் Read More »

நமது கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதனை எடுத்துச் செல்லவேண்டும். – ஆளுநர்

பிரதேச, மாவட்ட, மாகாண கலாசார விழாக்கள் பல கலைஞர்களுக்கான மேடை வாய்ப்புக்களை வழங்குகின்றன. இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதற்கு தொடர்ந்து ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதுடன் அதிகளவு கலைஞர்களை குறிப்பாக இளம் கலைஞர்களை மேடையேற்றவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வலி. மேற்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா அராலி இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22.08.2025) மாலை, பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

நமது கலாசாரம், அடிப்படை விழுமியங்களை கைவிடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு அதனை எடுத்துச் செல்லவேண்டும். – ஆளுநர் Read More »

பாடசாலைகளுக்கான வளப்பங்கீடுகளை உரிய முறையில் செய்யாத வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர்

எமது மாகாணத்தில் கல்வியில் மாற்றத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் சேர்த்து எங்கள் அனைவருக்கும் உள்ளது. ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பாக அதற்காக செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22.08.2025) நடைபெற்றது.

பாடசாலைகளுக்கான வளப்பங்கீடுகளை உரிய முறையில் செய்யாத வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் – ஆளுநர் Read More »