August 26, 2025

கிளிநொச்சி மருத்துவமனையின்பெண் நோயியல் பிரிவு உடன் இயக்கத் தொடங்க வேண்டும் – ஆளுநர்

நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண பெண் நோயியல் மருத்துவமனையை படிப்படியாக எவ்வளவு விரைவாக இயக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இயக்குவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும், இதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மருத்துவமனையின் செயற்பாடுகளை இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை (25.08.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மேற்படி […]

கிளிநொச்சி மருத்துவமனையின்பெண் நோயியல் பிரிவு உடன் இயக்கத் தொடங்க வேண்டும் – ஆளுநர் Read More »

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது

வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக்

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது Read More »

தெய்வீக சுகானுபவம் – 11

நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத் தூதரகத்துடன், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு இணைந்து நடாத்திய தெய்வீக சுகானுபவம் பதினோராவது (11) நிகழ்வானது 2025.08.20 புதன்கிழமை யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நல்லூர்க் கோட்டக்கல்வி அலுவலக முன்றலில் (முன்னாள் யா/கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில்) வடக்கு மாகாண கல்விஇ பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக

தெய்வீக சுகானுபவம் – 11 Read More »