நமக்கான தேவைகளை எப்படி விரைவாக நிறைவேற்றிக்கொள்கின்றோமோ, அதைப்போல பொது மக்களின் தேவைகளையும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
நான் பெரிது, நீ பெரிது என்று பாராமல் உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்களும், செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நாங்கள் சாதாரணமானவர்கள், எங்களை எப்போதும் மக்கள் சந்தித்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற வகையில் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதற்கே அனைவரும் முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்திலுள்ள […]