‘தூய்மை இலங்கை’ என்ற எண்ணக் கருவின் கீழ், ‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில், விழிப்புணர்வுச் செயலமர்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
‘தூய்மை இலங்கை’ (Clean Srilanka) என்ற எண்ணக் கருவை ஊக்குவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் – நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுடன் இணைந்ததாக ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு கைதடியிலுள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (14.08.2025) நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் […]