August 2, 2025

வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை (01.08.2025) நடைபெற்றது. வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரால், வலயம் தொடர்பான அடிப்படைத் தரவுகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் தமது வலயத்தின் பிரதான சவாலாக ஆளணி வெற்றிடம் அதிலும் ஆசிரிய வெற்றிடம் அதிகமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. வடக்கின் ஏனைய வலயங்களுடன் […]

வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் Read More »

எல்லைக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக அங்கு குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் களப்பயணம்

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட எல்லைக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக அங்கு குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட களப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை (01.08.2025) இடம்பெற்றது. முதலில் காஞ்சிரமோட்டைக்குச் சென்ற ஆளுநர் தலைமையிலான குழுவினர் அங்கு தற்போது வசிக்கும் 23 குடும்பங்களையும் சந்தித்தனர். அந்தப் பகுதிமக்கள், யானைவேலி அமைத்துத்தருமாறு, கிணறுகளை புனரமைத்துத்தருமாறும் கோரினர். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட

எல்லைக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக அங்கு குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் களப்பயணம் Read More »