August 1, 2025

மாங்குளம் முதலீட்டு வலயத்தை விவசாய முதலீட்டு வலயமாக கட்டியெழுப்புவதன் ஊடாக நிலையான வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய செழிப்பையும் ஏற்படுத்த முடியும். – கௌரவ ஆளுநர்

மாங்குளம் முதலீட்டு வலயத்தை விவசாய முதலீட்டு வலயமாக ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) உதவியுடன் கட்டியெழுப்புவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு கௌரவ அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோரின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (31.07.2025) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அனைவரையும் வரவேற்ற ஆளுநர் தனது உரையில், வடக்கு […]

மாங்குளம் முதலீட்டு வலயத்தை விவசாய முதலீட்டு வலயமாக கட்டியெழுப்புவதன் ஊடாக நிலையான வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய செழிப்பையும் ஏற்படுத்த முடியும். – கௌரவ ஆளுநர் Read More »

சாவகச்சேரி – பருத்தித்துறை பிரதான வீதியில் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் மதகு அமைப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சையால் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் உள்ளமை தொடர்பில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் அதனை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை (31.07.2025) நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உபதவிசாளர் ஆகியோரும் அங்கு

சாவகச்சேரி – பருத்தித்துறை பிரதான வீதியில் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். Read More »

சாவகச்சேரி சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் நிலவிவந்த இழுபறி நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று கலந்துரையாடல் நடத்தினார்.

சாவகச்சேரியில் சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் இழுபறி நிலவிவந்த நிலையில் அது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை (31.07.2025) நேரடியாகச் சென்று தொடர்புடைய தரப்புக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். சாவகச்சேரி நகர சபையின் சிறுவர் பூங்காவில் ஒரு பகுதிக் காணியை சமுதாய அடிப்படை வங்கிக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்த நிலையில் அந்தக் காணியை ஆளுநர் முதலில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். அந்தக் காணி சிறுவர் பூங்காவின் தொடர் அபிவிருத்திக்குத்

சாவகச்சேரி சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் நிலவிவந்த இழுபறி நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று கலந்துரையாடல் நடத்தினார். Read More »