நான் ஆளுநராகப் பதவியேற்றவுடன் அதிமேதகு ஜனாதிபதிக்கு எழுதிய முதல் கடிதம், வட்டுவாகல் பாலப் புனரமைப்புத்தான். – ஆளுநர்
பிறந்த மண்ணில் வாழ்வதைப்போன்ற சுகம் வேறு எங்கும் எந்த வசதிகளுடன் வாழ்ந்தாலும் கிடைக்காது. 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த நீங்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து இன்று சொந்த மண்ணில் வாழ்கின்றீர்கள். உங்களைப் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கொக்கிளாய் அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை (29.08.2025) இடம்பெற்றது. மாலையில் ஆலய மலர் மற்றும் இறுவட்டு என்பனவற்றின் வெளியீடுகள் நடைபெற்றன. இந்த […]