July 2025

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர்தலைமையிலான உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தலைமையிலான உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (09.07.2025) நடைபெற்றது. நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனுவையைக் கையளித்த தவிசாளர், திண்மக் கழிவகற்றல் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர்தலைமையிலான உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு Read More »

அளவெட்டி அருணோதய கல்லூரியின் நிறுவுநர் நினைவு தினமும், பரிசளிப்பு விழாவும்

எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் தலைமைத்துவம் சரியாக அமைகின்ற போது தான் எழுச்சியடைகின்றது. வாழ்வில் நிம்மதியான – சந்தோசமான பருவம் என்பது பாடசாலை மாணவர் பருவமே. அதைப்போன்ற காலம் வாழ்வில் மீண்டும் வராது. ஏத்தகைய உயர் பதவிகளிலிருந்தாலும் கிடைக்காத சந்தோசமும் – நிம்மதியும் பாடசாலைப் பருவத்தில்தான் கிடைக்கும். அதை உணர்ந்து மாணவர்கள் கற்கவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அளவெட்டி அருணோதய கல்லூரியின் நிறுவுநர் நினைவு தினமும், பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் சிவஞானசோதி

அளவெட்டி அருணோதய கல்லூரியின் நிறுவுநர் நினைவு தினமும், பரிசளிப்பு விழாவும் Read More »

மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08.07.2025) நடைபெற்றது. அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டங்கள் மற்றும் அரசாங்க திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களுக்கே மணலை அதிக விலையில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை இருப்பது தொடர்பில் குறிப்பிட்ட ஆளுநர், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் ஆராய்ந்து கொண்டிருக்காமல் முடிவு எடுக்கப்பட

மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் Read More »

உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்கான நிலையத்தை வடக்கில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்கான நிலையத்தை வடக்கில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08.07.2025) நடைபெற்றது. கலந்துரையாடலுக்கு வருகை தந்த தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.கொத்தலாவல தலைமையிலான குழுவினரை வரவேற்ற ஆளுநர், வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் உடனடியாக சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்கும் நிலையத்தை

உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்கான நிலையத்தை வடக்கில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் Read More »

கல்மடுநகர் மூலிகை கிராமம் மற்றும் சித்த மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார்

கௌரவ மீன்பிடித்துறை அமைச்சர் ஆர். சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜே. ரஜீவன் மற்றும் கண்டவளை பிரதேச செயலாளர் திரு. பிருந்தகரன் ஆகியோர் கல்மடுநகர் கிராமிய சித்த வைத்தியசாலை மற்றும் மாகாண மூலிகைக் கிராமத்திற்கு 03 ஜூலை 2025 அன்று விஜயம் மேற்கொண்டனர். இவ்விஜயத்தின போது வைத்தியசாலையின் செயற்பாடுகள், வழங்கப்படும் சேவைகள், மாகாண மூலிகை கிராமத்தின் வருமானம் பெறும் முறைமைகள் மற்றும் எதிர்கொள்ளப்படும் சவால்கள் ஆகியவை பற்றி கேட்டறிந்ததுடன் மூலிகைச் சிகிச்சை சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டங்கள் தொடர்பான

கல்மடுநகர் மூலிகை கிராமம் மற்றும் சித்த மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார் Read More »

ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி நெறி -2025

2025 ம் ஆண்டுக்கான PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களிற்கு ஒழுங்கு செய்யப்பட்ட இயலளவைக் கட்டியெழுப்பும் பயிற்நெறிகளின் முதலாவது பயிற்சி நெறி வடமாகாண முகாமைத்துவ பயிற்சி அலகினால் 03 யூலை 2025 அன்று கனகபுரத்தில் அமைந்துள்ள முகாமைத்துவபயிற்சி அலகின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் Work Family Balance எனும் விடயம் பற்றி வைத்திய கலாநிதி சிவசுதன் வளவாளராக கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இதில் 20 வைத்தியர்கள் இணைந்து

ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி நெறி -2025 Read More »

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள குழுவினர் உவா மாகாணத்தின் மருந்து உற்பத்தி பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டனர்.

2025 PSDG நிதியீட்டத்தின் கீழ் வட மகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அச்சுவேலி மருந்து உற்பத்திப் பிரிவிற்கு புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்யும் தேவைகருதி அவற்றினை பார்வையிடுவதற்காக தியத்தலாவையில் அமைந்துள்ள ஊவா மாகாண ஆயுள்வேத திணைக்களத்தின் மருந்து உற்பத்திப் பிரிவிற்கு எமது மாகாணத்தின் உத்தியோகத்தர்கள் 25,26,27 /06/2025 ம் திகதிகளில் சென்றிருந்தனர். அங்கு பயன்பாட்டில் உள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பார்வையிட்டதுடன் அவற்றின் பயன்பாடு இயங்கு முறைகள் என்பவற்றையும் கேட்டறிந்து கொண்டனர். இதில் அச்சுவேலி

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள குழுவினர் உவா மாகாணத்தின் மருந்து உற்பத்தி பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டனர். Read More »

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரினார். அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (02.07.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம்இ வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்இ வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத்

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு Read More »

வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு

கால்நடை வைத்தியர்கள் மாத்திரமல்ல அனைத்துத்துறையினரும் பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில்தான் தங்கள் சேவைகளை முன்னெடுக்கின்றார்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்ததுடன், இடர்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு தேவையான உங்கள் சேவைகள் தொடரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு வலம்புரி ஹோட்டலில் இன்று புதன்கிழமை (02.07.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு ஆளுநர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு Read More »

கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய நிறுவுநர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும்

போர் – இடப்பெயர்வுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் எப்படியொரு சமநிலை இருந்ததோ அதைப்போன்றதொரு நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய நிறுவுநர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை (02.07.2025) பாடசாலையில் பதில் அதிபர் இ.திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநரும், சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராஜாவும், கௌரவ விருந்தினராக வலிகாமம்

கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய நிறுவுநர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் Read More »