வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
இப்போது நடைபெறும் விபத்துக்களைப் பார்க்கும்போது, பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பயணிக்கும் ஏனையோரின் உயிரிலும் கவனமில்லை. தமது உயிரிலும் கவனமில்லை. இதை அறியாமை என்று சொல்வதா அல்லது கவனக்குறைவு என்று சொல்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாணப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை காலை (30.07.2025) அதிகார சபையின் […]