வடக்கில் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான 66 வெற்றிடங்களை முழுவதுமாக நிரப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. – கௌரவ ஆளுநர்
வடக்கு மாகாண இலங்கை தொழில்நுட்பவியலாளர் சேவைச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் சேவைநலன் பாராட்டு விழாவும் கே.கே.எஸ். வீதி நாச்சிமார் கோயிலுக்கு அண்மையிலுள்ள திவ்ய மஹாலில் நேற்று சனிக்கிழமை மாலை (26.07.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், விசேட விருந்தினராக ஓய்வுபெற்ற பிரதம செயலாளர் இ.இளங்கோவனும் கலந்துகொண்டனர். ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்ததாவது, பல தொழிற்சங்கங்கள் வடக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் அந்தத் தொழிலுக்குரியனவாக இருக்கின்றன. […]
