அடுத்த 5 ஆண்டுகளில், வடக்கு மாகாணம் நெறிமுறைசார்ந்த கடலட்டை வளர்ப்பில் உலகளாவிய முதன்மையிடத்துக்கு வரும் என நம்புகிறேன் – கௌரவ ஆளுநர்
கடலட்டை உற்பத்தியை அதிகரிப்பதை மாத்திரம் நாம் இலக்காகக் கொண்டு செயற்பட்டாலோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளை அனுமதித்தாலோ கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலையை சீர்குலையும். நாம் எமது சுற்றுச்சூழல் நிலைத்து நீடித்து நிற்கக்கூடிய வகையில் செயலாற்றவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சினமன்குளோபல் நிறுவனமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய கடலட்டை உற்பத்தி தொடர்பான கருத்தரங்கு ‘நோர்த் ஹேட் ஹொட்டலில்’ இன்று சனிக்கிழமை காலை (26.07.2025) நடைபெற்றது. இங்கு தொடக்கவுரையாற்றிய ஆளுநர், […]