பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு
இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேகாரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம். இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு, சிரேஷ்ட வெளிநாட்டுச்சேவை உத்தியோகத்தர் அகஸ்ரின் கிறிஸ்ரிரூபன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை (19.07.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் […]