July 12, 2025

நயினாதீவு பிரதேச மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பதவியே எனது முதல் நியமனம். தீவக மக்கள் எதிர்கொள்ளும் இடர்கள் தொடர்பில் எனக்குத் தெரியும். இந்தப் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு இயன்றவரையில் முயற்சிசெய்வேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். திரு. திருமதி சிவப்பிரகாசம் வாசன் ஜெசிந்தா தம்பதியரின் திட்ட உருவாகத்தில், புலம்பெயர் தேசத்தில் வாழும் நயினாதீவு உறவுகள் மற்றும் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்க வாறன்டோர்ப் கிளையின் நிதிப் பங்களிப்பில் இலங்கை […]

நயினாதீவு பிரதேச மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. Read More »

புலிக்குளம் தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்ட புலிக்குளம் தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11.07.2025) கலந்துரையாடல் நடைபெற்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்கள், நீர்பாசனத் திணைக்களப் பொறியியலாளர்கள், கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர்கள், யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தினர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்புக்குள்

புலிக்குளம் தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஏனைய மருத்துவங்களால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என அவர்கள் நம்புவதன் காரணமாக சுதேச மருத்துவத்தை தேடிச் செல்கின்றனர். இந்த மாற்றத்தை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் இன்று வெள்ளிக்கிழமை (11.07.2025) கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது Read More »