July 10, 2025

விபத்துக்களை தணிப்பது மற்றும் தடுப்பது தொடர்பான பொறிமுறையை உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல்

விபத்துக்களை தணிப்பது மற்றும் தடுப்பது தொடர்பான பொறிமுறையை உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (09.07.2025) நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் விபத்துக்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஆளுநர் தனது முன்னுரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து விபத்துத் தணிப்புத் தொடர்பான விடயத்தை தன்னார்வமாக முன்னெடுக்கும், குழந்தை மருத்துவ நிபுணர் பி.சயந்தன் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தினார். ‘பாதுகாப்பான வீதி, பாதுகாப்பான […]

விபத்துக்களை தணிப்பது மற்றும் தடுப்பது தொடர்பான பொறிமுறையை உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல் Read More »

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர்தலைமையிலான உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தலைமையிலான உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (09.07.2025) நடைபெற்றது. நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனுவையைக் கையளித்த தவிசாளர், திண்மக் கழிவகற்றல் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர்தலைமையிலான உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு Read More »

அளவெட்டி அருணோதய கல்லூரியின் நிறுவுநர் நினைவு தினமும், பரிசளிப்பு விழாவும்

எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் தலைமைத்துவம் சரியாக அமைகின்ற போது தான் எழுச்சியடைகின்றது. வாழ்வில் நிம்மதியான – சந்தோசமான பருவம் என்பது பாடசாலை மாணவர் பருவமே. அதைப்போன்ற காலம் வாழ்வில் மீண்டும் வராது. ஏத்தகைய உயர் பதவிகளிலிருந்தாலும் கிடைக்காத சந்தோசமும் – நிம்மதியும் பாடசாலைப் பருவத்தில்தான் கிடைக்கும். அதை உணர்ந்து மாணவர்கள் கற்கவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அளவெட்டி அருணோதய கல்லூரியின் நிறுவுநர் நினைவு தினமும், பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் சிவஞானசோதி

அளவெட்டி அருணோதய கல்லூரியின் நிறுவுநர் நினைவு தினமும், பரிசளிப்பு விழாவும் Read More »