June 2025

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, யாழ். மாநகர சபையின் மேயர் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாநகர சபையின் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி மதிவதனி விவேகானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (16.06.2025) சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் அவர் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். அத்துடன் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, யாழ். மாநகர சபையின் மேயர் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார் Read More »

இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்கள் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல்

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன், இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்கள் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடல் நடத்தினர். இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏது நிலைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. ஆனால் அண்மைக்காலத்தில்

இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்கள் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் Read More »

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

வெளிநாட்டு உதவிகளில் நாம் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது. வெளிநாட்டிலுள்ள அடுத்த தலைமுறைகள் – சந்ததிகள் மாறும்போது இந்த உதவிகள் எதிர்காலத்தில் நின்றுபோகக் கூடும். எனவே நாம் எமது சொந்தக் காலில் நிற்கவேண்டும். அது இந்தச் சிறுவர் இல்லத்துக்கு மாத்திரமல்ல எமது சமூகத்துக்கும் பொருந்தும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நான்காவது ஆண்டாகவும் இல்ல மைதானத்தில் 14.06.2025 அன்று

கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி Read More »

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகரன் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் கௌரவ ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை, ஆளுநர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்.மாவட்டச் செயலர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களப்

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More »

மலேசியத் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில் முதலீட்டாளர்களை அதில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு இலங்கைக்கான மலேசியத் தூதுவர் பாதில் ஹிசாம் ஆடமிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை முன்வைத்தார். யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மலேசியத் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினரை 12.06.2025 அன்று வியாழக்கிழமை இரவு யாழ். நகரிலுள்ள நோர்த் கேட் ஹோட்டலில் இரவு விருந்துடன் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்துக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பாரம்பரிய உறவுகள் தொடர்பில் மலேசியத்

மலேசியத் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினரை சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »

வடக்கு மாகாணத்தில் நிலைத்து நிற்கக் கூடிய கூட்டுறவு அபிவிருத்திக்காக உற்பத்தி கூட்டுறவை வளப்படுத்தும் – உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் நிலைத்து நிற்கக் கூடிய கூட்டுறவு அபிவிருத்திக்காக உற்பத்தி கூட்டுறவை வளப்படுத்தும் – உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாந்த ஜயரட்ன ஆகியோரின் பங்கேற்புடன் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 12.06.2025 அன்று வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில்

வடக்கு மாகாணத்தில் நிலைத்து நிற்கக் கூடிய கூட்டுறவு அபிவிருத்திக்காக உற்பத்தி கூட்டுறவை வளப்படுத்தும் – உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் 12.06.2025 அன்று வியாழக்கிழமை நடைபெற்றது. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தினார். இதனுடன் தொடர்புடைய தரப்புக்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆளுநரிடம் குறிப்பிட்டார். மேலும், வடக்கு மாகாணத்துக்கு தாதியர்கள்

வடக்கு மாகாணத்தின் சுகாதார சேவைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல்

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 11.05.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், காலநிலை மாற்றம் காரணமாக மழை எப்போது கிடைக்கும் என்பதை எதிர்வுகூற முடியாத

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் Read More »

வீட்டுத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதல்கட்டக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் (PSDG) முன்னெடுக்கப்படும் தலா 18 லட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதல்கட்டக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் 11.06.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநரிடம், வீடுகள் தேவை என முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சுக்கு பாரப்படுத்தப்பட்டு உள்ளூராட்சி அமைச்சால் குழு

வீட்டுத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதல்கட்டக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு Read More »

பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாள்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. தொடர்;ச்சியாக சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் சட்டநடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்குமாறு பணித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இதனை நாளையிலிருந்தே ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார். பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 11.06.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது. ஆளுநர் தனது ஆரம்ப உரையில், அலுவலர்களை களத்துக்குச் சென்று பணியாற்றுமாறு திரும்பத் திரும்பக் கூறிவருகின்றபோதும்

பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »