February 2025

வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் அரிசி வகைகள் விற்பனை செய்யப்படும் விலைகள்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் அரிசி வகைகள் விற்பனை செய்யப்படும் விலைகளை, மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் அரிசி வகைகள் விற்பனை செய்யப்படும் விலைகள் Read More »

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாடப்பட்டது

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்று (பெப்ரவரி 04) கைதடியில் உள்ள பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் வைபவ ரீதியாக கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை பிரதிப் பிரதம செயலாளர்-நிர்வாகம் திருமதி. எ. அன்ரன் யோகநாயகம் ஏற்றி வைத்தார், வடக்கு மாகாணக் கொடியை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. எஸ்.பிரணவநாதன் ஏற்றி வைத்தார். நன்றியுரையை உதவிப் பிரதம செயலாளர் திருமதி எம்.டென்ஷியா வழங்கியிருந்தார். பிரதம செயலாளரின்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் கொண்டாடப்பட்டது Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் இலங்கையின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி.

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தில், அனைத்து இலங்கையர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரம் என்பது கடந்த காலத்தை நினைவுகூரும் ஒரு நிகழ்வாக மட்டுமல்லாமல், ஒற்றுமை, அமைதி மற்றும் செழிப்பில் வேரூன்றிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு உறுதிப்பாடாகும். நாட்டின் வரலாற்றிலும் அதன் எதிர்காலத்திலும் வடக்கு மாகாணம் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. வடக்கின் ஒவ்வொரு குடிமகனதும் வாழ்க்கையை முன்னேற்றுவது மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வாய்ப்புகளை உருவாக்குவது எமது கூட்டுப் பொறுப்பாகும். நா.வேதநாயகன், ஆளுநர், வட

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் இலங்கையின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி. Read More »

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் – வடக்கு மாகாண ஆளுநர்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்து வரவேண்டும் என்றால் அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகள் தொடர்பிலும் கண்காணிப்புடன் இருங்கள். தற்போதைய இளம் சமூகத்தை திசைதிருப்பும் வகையில் பல்வேறு விடயங்கள் நடக்கின்றன. அவற்றில் சிக்காமல் உங்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என பெற்றோர்களிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஏடு நிறுவனத்தால் மாணவர்களுக்கான கற்றல் உதவிகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) காலை நடைபெற்றது. இந்த

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ அதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்தால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மாவிட்டபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) திறந்து வைக்கப்பட்ட திருக்குறள் வளாகத்தின் மாலை நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக ஆளுநர் கலந்துகொண்டார். செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற மாலை நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் ம.பிரதீபன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், தமிழ்த்துறை பீடாதிபதி விசாகரூபன் ஆகியோர் பங்கேற்றனர். ஆளுநர் தனது அதிதி உரையில், ஏனையோரால் நினைத்துப்பார்க்க முடியாத விடயங்களை ஆறு.திருமுருகன் அவர்கள் சாதித்து வருவதாக புகழாரம்

வள்ளுவர் பிறந்தமையால் தமிழ் நாட்டுக்கு எவ்வாறு பெருமையோ அதேபோல திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்தில் அமைந்தால் யாழ்ப்பாண மண்ணுக்கும் பெருமை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். Read More »

தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போது விகாரை தற்போது அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்றும் அது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் இதன்போது சமர்ப்பித்திருந்தனர். திஸ்ஸவிகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்கவேண்டும் எனக் கோரியிருந்தனர். காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பில் விகாராதிபதியுடனும், நயினாதீவு

தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார். Read More »

அமரத்துவமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சோ.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு (01.02.2025) பிற்பகல் சென்று அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஆளுநர், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களைக் கூறினார்.  

அமரத்துவமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சோ.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார். Read More »

‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான அறிமுக நிகழ்வு நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

கௌரவ ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான அறிமுக நிகழ்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை (03.02.2025) யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட திருநகர் வட்டாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (01.02.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம

‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான அறிமுக நிகழ்வு நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. Read More »

வடக்கு மாகாணத்தில் 01.02.2025 முதல், நீண்டதூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிகளுக்கு பிரயாணசிட்டை வழங்கப்படவேண்டும்

அதேபோன்று உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் 01.03.2025 ஆம் திகதிக்கு முன்னர் பயணச்சிட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர் பரிசோதக உத்தியோகத்தர்கள் ஊடாக சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் தாங்கள் செலுத்தும் கட்டணங்களின் மீதிப்பணம் தரப்படுவதில்லை எனவும், கூடுதலான கட்டணம் அறவிடப்படுவதாகவும்

வடக்கு மாகாணத்தில் 01.02.2025 முதல், நீண்டதூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிகளுக்கு பிரயாணசிட்டை வழங்கப்படவேண்டும் Read More »