February 2025

ஏனையோருக்கு உதவிகளைச் செய்வதற்கு இளைய சமூகம் முன்வரவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

இன்றைய பிள்ளைகளை கஷ்டம் தெரியாமல் பெற்றோர் வளர்க்கின்றனர். அதனால்தான் என்னவோ இன்றைய இளைய சமூகம் சுற்றியிருப்பவர்கள் கஷ்ரப்படுவதைக்கண்டும் காணாமலும் இருக்கின்றது. ஏனையோருக்கு உதவிகளைச் செய்வதற்கு முன்வராமல் இருக்கின்றது. இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு இவ்வாறான கல்விக்கூடங்கள் அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கல்விக்கூடம் திறப்பு விழா இன்று புதன்கிழமை (12.02.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆளுநர் தனது உரையில் மேலும் […]

ஏனையோருக்கு உதவிகளைச் செய்வதற்கு இளைய சமூகம் முன்வரவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026′ கையேடு ‘

‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’ கையேடு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோவிடம் இன்று புதன் கிழமை (12.02.2025) கையளிக்கப்பட்டது. ஜப்பானியத் தூதுவரின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தக் கையேடு அவருக்கு வழங்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026′ கையேடு ‘ Read More »

குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையை வழங்கிவரும் தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனையின் சேவைகள் இன்னும் விரிவாக்கப்பட்டு தொடரவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்

தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனையின் சேவை நிலையம் இல. 611, வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (11.02.2025) பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், போருக்கு முன்னர் தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனை மிகச் சிறப்பாக இயங்கியதாகவும் இடப்பெயர்வு காரணமாக அது செயலிழந்து போனதாகவும் குறிப்பிட்டார். மீண்டும் தெல்லிப்பழையில் இயங்கத் தொடங்கியிருந்தாலும் பல பிரச்சினைகளை மருத்துவமனை எதிர்கொண்டதாகவும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார். மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் மருத்துவ நிபுணர் ந.சரவணபவா அவர்கள் தெல்லிப்பழை

குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையை வழங்கிவரும் தெல்லிப்பழை கூட்டுறவு மருத்துவமனையின் சேவைகள் இன்னும் விரிவாக்கப்பட்டு தொடரவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார் Read More »

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோ கலந்துரையாடல் நடத்தினார்

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (11.02.2024) இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அபிவிருத்திப் பணிகளை வடக்கில் முன்னெடுப்பதற்கான சாதகமாக சமிஞ்சை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த காலத்தில் ஜப்பானிய அரசாங்கம் ஜெய்க்கா திட்டத்தின் ஊடாக மேற்கொண்ட உதவிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். வடக்கின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர் போக்குவரத்து வசதிகள், வீதிகள் அதற்குப் பிரதான சவாலாக இருப்பதாகவும் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பயண நேரம் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோ கலந்துரையாடல் நடத்தினார் Read More »

இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ தலைமையிலான குழுவினர் ஆளுநருடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ தலைமையில் இலங்கையில் பணியாற்றும் ஐ.நா.வின் அனைத்து முகவர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான வடக்கு மாகாண அலுவலர்களையும், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களையும் தனித் தனியாக சந்தித்து கலந்துரையாடினார்கள். முன்னதாக, வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது

இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ தலைமையிலான குழுவினர் ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமலை வலியுறுத்தியதுடன், வடக்கில் புதிதாக தென்னை பயிர்ச் செய்கை வலயத்தை ஆரம்பிப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க ஆகியோர் தலைமையிலான குழுவினர்

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை Read More »

சீனா மற்றும் இலங்கை நாட்டின் நட்புறவின் பயனாக ‘சீனாவின் சகோதர பாசம்’ என்னும் வாசகத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா நாட்டின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

திங்கட்கிழமை (10.02.2025) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பயனாளர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

சீனா மற்றும் இலங்கை நாட்டின் நட்புறவின் பயனாக ‘சீனாவின் சகோதர பாசம்’ என்னும் வாசகத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா நாட்டின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் திங்கட் கிழமை காலை (10.02.2025) இடம்பெற்றது. வடக்கிலுள்ள மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர்கள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றித்தருமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைத்தாக சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஆளுநரிடம் தெரிவித்தார். அத்துடன் தமது உதவிகள் வழங்கல்களில் எந்தவொரு பாரபட்சமும் இல்லை என்பதையும் ஆளுநருக்கு அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் விவசாயம், சுற்றுலாத்துறை அபிவிருத்தியின் தேவைப்பாடுகள் தொடர்பில்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு Read More »

தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரைவிடுத்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் விவசாயத்துறையினர் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் சனிக்கிழமை (08.02.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிய வெள்ளை ஈ தாக்கம் தற்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. குளிரான காலநிலை காரணமாக அதன் தாக்கம் குறைவடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அது பரவத் தொடங்கியுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் அது பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது. விவசாய ஆராய்ச்சி திணைக்களத்தால்

தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரைவிடுத்தார். Read More »

எமது விவசாய உற்பத்திகளை பெறுமதி சேர் விவசாய உற்பத்திப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும் – வடக்கு மாகாண ஆளுநர்

எமது விவசாய உற்பத்திகளை பெறுமதி சேர் விவசாய உற்பத்திப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும். இதன்போது விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வடைவதுடன், விவசாயம் எமது சமூகத்தில் மதிப்பு மிக்க தொழிலாகவும் மாற்றமடையும் என்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள் தெரிவித்தார். இமை ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘இமை ஊடக வெற்றிப்படி’ நிகழ்வு உடுப்பிட்டி கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (08.02.2025) இடம்பெற்றது. இதன்போது விவசாயிகள், கலைஞர்கள், மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த

எமது விவசாய உற்பத்திகளை பெறுமதி சேர் விவசாய உற்பத்திப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »