February 2025

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது – வடக்கு மாகாண ஆளுநர்

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது. தொழிற்சங்கங்களும் உரியவகையில் சேவையாற்றிக்கொண்டே அதை மேம்படுத்தும் வகையில் தங்களுக்கான தேவைப்பாடுகளை கோரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் என்பனவற்றின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் தனித்தனியே சந்தித்து இன்று வெள்ளிக்கிழமை காலை (21.02.2025) கலந்துரையாடினர். கொடுப்பனவுகளை அதிகரித்தல், இடமாற்றங்கள் தொடர்பில் […]

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலர் பிரிவின் பல கிராமங்களுக்கு ஆளுநர் விஜயம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலர் பிரிவு மற்றும் மாந்தைமேற்கு பிரதேச செயலர் பிரிவின் பல கிராமங்களுக்கு புதன்கிழமை 19.02.2025 களப்பயணம் மேற்கொண்டு மக்களுடன் சந்திப்புக்களை நடத்தினார். இதன்போது மக்களால் பல்வேறு விடயங்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் ஆளுநரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் மடு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரணைஇலுப்பைக்குளம், கீரிசுட்டான், பாலம்பிட்டி ஆகிய கிராமங்களுக்கு மடு பிரதேச செயலர்

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலர் பிரிவின் பல கிராமங்களுக்கு ஆளுநர் விஜயம் Read More »

மஹா சிவராத்திரிக்கு மறுநாள் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – ஆளுநர்

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக 01.03.2025 சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.

மஹா சிவராத்திரிக்கு மறுநாள் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதி விவரங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாணத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதி விவரங்கள் கோரியமைக்கு அமைவாக 05.02.2025 அன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், ஜனாதிபதி செயலகத்துக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் 09.02.2025 அன்று அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் 1,500 கிலோ மீற்றர் நீளமான கிராமிய வீதிகளைப் புனரமைப்பதற்கு

வடக்கு மாகாணத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதி விவரங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. Read More »

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லப்பட்டால், சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லப்பட்டால், சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (20.02.2025) கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது ஆளுநர், பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் பெற்றோர் உள்ளிட்ட எவரும் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணிவிக்காது ஏற்றிச் செல்வதாக முறையிடுகின்றனர். குறிப்பாக

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லப்பட்டால், சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாணத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் பொதுமுகாமையாளர் ஆகியோரைப் பணித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (20.02.2025) வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கௌரவ ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டமையைப்போன்றும், ஏற்கனவே

வடக்கு மாகாணத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்பு Read More »

இந்தப் பாடசாலையில் கல்விகற்று பல்கலைக்கழகத்துச் செல்லும் மாணவர்கள், இந்தக் கிராமத்தை அபிவிருத்தி செய்யவேண்டும். அதன் ஊடாகவே இந்தப் பிரதேசங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் எல்லையோர கிராமத்திலுள்ள இரணை இலுப்பைக்குளம் அ.த.க. பாடசாலை ‘தரம் 1 சி’ ஆக தரம் உயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை (19.02.2025) பாடசாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். பாடசாலையின் அதிபர் ந.கோபு தனது தலைமை உரையில், பாடசாலையின் தேவைப்பாடுகளை முன்வைத்ததுடன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 118 ஆண்டுகளின் பின்னர் கல்விப்பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு வாய்ப்புக்கள் கிடைத்துள்ளமையும் சுட்டிக்காட்டினார். அதேபோன்று தற்போது உயர்தர வகுப்பில்

இந்தப் பாடசாலையில் கல்விகற்று பல்கலைக்கழகத்துச் செல்லும் மாணவர்கள், இந்தக் கிராமத்தை அபிவிருத்தி செய்யவேண்டும். அதன் ஊடாகவே இந்தப் பிரதேசங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குமான வாக்குப்பணக்கணக்கில் (vote on account) முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குமான வாக்குப்பணக்கணக்கில் (vote on account) முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை (18.02.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் செ.பிரணவநாதன் தலைமையில்

வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குமான வாக்குப்பணக்கணக்கில் (vote on account) முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் Read More »

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (18.02.2025) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கௌரவ ஜனாதிபதி அவர்களால் நேற்று திங்கட் கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு வகையிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகளவான நிதியும் வடக்கு மாகாண சபைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கௌரவ ஜனாதிபதி தனது உரையில், வடக்கு அதிகாரிகள் கோரிய நிதியையே வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார் Read More »

இந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்

கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு பிரதமர் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (16.02.2025) சென்றிருந்தார். அங்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோருடன், ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் அதிபர் மற்றும் பணியாளர்கள் பிரதமரை வரவேற்றனர். இதன் பின்னர் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவு இளையோர் ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் இணைய முடியாத நிலைமை காணப்படுவதாக மாவட்டச் செயலர் மற்றும் ஆளுநர் ஆகியோர் சுட்டிக்காட்டினர். ஆங்கிலமொழி

இந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் Read More »